ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூன்று பாடல்களும், டிரைலரும் இதுவரை வெளியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். இதனிடையே, மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்குச் விஜய் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சென்றனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
'தி கோட்' படத்தில் விஜயகாந்த்தை 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி நடிக்க வைத்துள்ளனர். அதற்கு சம்மதித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ரகசியம் படம் வெளிவரும் வரை அறிவிக்கப்படுமா அல்லது தனி அறிவிப்பு வெளியாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
படத்தில் மற்றுமொரு ரகசியம் இருக்கிறது என்கிறார்கள். ஒரு பாடல் காட்சியில் த்ரிஷா நடித்திருக்கிறாராம். விஜய், த்ரிஷா இருவரும் இணைந்து ஒரு அதிரடிப் பாடலுக்கு நடனமாடியிருப்பதாகத் தகவல். 'கில்லி' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'அப்படிப் போடு' பாடல் போலவே அந்தப் பாடலும் அதிரடி நடனத்துடன் இருக்கும் என்கிறார்கள். அது பற்றிய அறிவிப்பும் படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக வெளியாக வாய்ப்புள்ளது என்பது ஒரு ரகசியத் தகவல்.