4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
அறம் புரொடக்ஷன் சார்பில் ராமலிங்கம் தயாரித்துள்ள படம் "பி 2 இருவர்". கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பஹத் விக்ராந்த் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். யாத்திசை படத்தில் நடித்த சித்து கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் சிவம் கூறியதாவது: முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வருகிற 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார்.