அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
2024ம் ஆண்டின் அடுத்த நான்கு மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் பிஸியான மாதங்கள். ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை நாட்களில் சில பெரிய படங்கள், அவற்றிற்கிடையில் மேலும் சில பெரிய படங்கள் என அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதனால் கிடைக்கும் 'கேப்'ல் மட்டுமே சிறிய படங்களை வெளியிட்டாக வேண்டும்.
சிறிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதிகளை எந்த ஒரு திரைப்பட சங்கமும் கதவைத் திறந்து வழி கொடுப்பதில்லை. தியேட்டர்காரர்களே பெரிய படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து தியேட்டர்களைத் தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சிறிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி 8 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடித்து வெளியாக உள்ள 'அந்தகன்' படம் மட்டுமே கொஞ்சம் ஸ்டார் அந்தஸ்து உள்ள ஒரு படம். மற்ற படங்கள் அனைத்துமே ஸ்டார் அந்தஸ்தில்லாத சிறிய படங்களே. “அந்தகன், கவுண்டம்பாளையம், லைட் அவுஸ், மின்மினி, பி 2 இருவர், பார்க், சூரியனும் சுரியகாந்தியும், வீராயி மக்கள்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் இவற்றில் ஏதாவது மாற்றம் வரலாம்.
கடந்த வாரம் வெளியான சிறிய படங்களில் ஒரு சில விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை என்பதுதான் தியேட்டர் வட்டாரங்களில் சொல்லப்படும் நிலை. இந்த வாரத்தில் வெளியாகும் சிறிய படங்கள் அடுத்த வாரம் வரை மட்டுமே தாங்கும்.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ல் 'தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா' ஆகிய படங்கள் வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் படங்கள் என்பதால் அவை அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.