போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாக உள்ளார். அவரது இசையில் உருவாகி வரும் 'தேவரா' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சுட்டாமலே' சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அப்பாடல் பிரபல சிங்களப் பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலின் காப்பியாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர். சிங்களத்தில் வெளியான அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல்.
இந்நிலையில் சிங்களப் பாடலுக்கு இசையமைத்த சமத் சங்கீத், இந்த காப்பி சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதத்தில், “அனிருத்தின் படைப்புகளை எப்போதும் ரசிப்பவன். என்னுடைய பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலைப் போன்ற ஒரு பாடலை இசையமைக்க அவருக்கு தூண்டுகோலாக எனது பாடல் அமைந்தது எனக்கு மகிழ்ச்சிதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இந்த காப்பி சர்ச்சைக்கு சம்பந்தப்பட்டவரே இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.