‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட் படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடித்த தனக்கு சிறிய கேரக்டரே கொடுக்கப்பட்டதால் அந்த படம் குறித்தும் அதில் கதாநாயகனாக நடித்த விஜய் குறித்தும் கிண்டலாக கருத்து தெரிவித்து பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டார். கடந்த வருடம் வெளியான தசரா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.
கடந்த வருட இறுதியில் இவருக்கும் தனுஜா என்கிற மாடல் அழகிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணப்பெண் சைன் டாம் சாக்கோவின் நீண்ட நாள் தோழியும் கூட. அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கினார் சாக்கோ. இதனால் இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு விட்டது என்று பேசப்பட்டாலும் கூட மணப்பெண் தனுஜா தாங்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தங்களுக்குள் பிரிவில்லை என்று அப்போதைக்கு அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சைன் டாம் சாக்கோ பேசும்போது, தான் இப்போது சிங்கிளாக இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். என்னதான் தான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள சாக்கோ தற்போது மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் கவனத்தைத் திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்வதிலும் அவர்களை கன்வின்ஸ் செய்வதிலும் நிறைய சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.




