வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் கை விரலில் வைத்துக் கொள்கிற அளவிற்காக மெம்மரிடி கார்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தனை தியேட்டரில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். சென்னையில் இருந்து கொண்டே தென்காசி தியேட்டருக்கு படத்தை ஆன்லைனில் அனுப்ப முடியும்.
ஆனால் அந்த காலத்தில் பிலிம் பிரிண்ட் போட வேண்டும். ஒவ்வொரு பிரிண்டுக்கும் கணிசமான தொகை செலவாகும். இதனால் சென்னையில் நான்கைந்து பிரிண்டுகள், மற்ற மாவட்ட தலைநகர்களுக்கு 2 பிரிண்டு மற்ற பெரிய நகராட்சிகளுக்கு ஒரு பிரிண்டு என சுமார் 40 முதல் 50 பிரிண்டுகள் போட்டு அனுப்பி வைக்கப்படும்.
இந்த மாதிரியான நிலையில் ஏதாவது ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானால் ஒரே பிரிண்டை வைத்து மேலும் சில தியேட்டர்களில் படத்தை ஓட்டி விடுவார்கள். படம் திரையிடும் நேரத்தை 30 நிமிட இடைவெளிவிட்டு அறிவிப்பார்கள். ஒரு தியேட்டரில் 30 நிமிடம் ஓடிய ரீலை எடுத்துக் கொண்டு அடுத்த தியேட்டருக்கு ஓடுவார்கள் இப்படியாக அந்த ரீலில் மூன்று நான்கு தியேட்டர்களுக்கு படம் செல்லும்.
இப்படி சினிமா ரீல்கள் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடிய சம்பவங்களின் ஹைலைட் இலங்கை யாழ்பாணத்தில் நடந்தது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண நகரில் எந்த ஒரு படமும் ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே திரையிடப்படும். தமிழ்படங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது மூன்று பிரதிகள் மட்டுமே தருவிக்கப்படும். அதில் இரு பிரதிகள் தலைநகர் கொழும்புவிலும் ( கெப்பிட்டல், பிளாசா ) மறு பிரதி யாழ் நகரிலும் திரையிடப்படும்.
1973ல் 'வசந்தமாளிகை' திரையிடப்பட்டது. வழக்கம்போல 3 பிரிண்டுகள் மட்டும் அனுப்பப்பட்டது. அந்த வகையில் யாழ்பாணத்திற்கு ஒரு பிரிண்ட் சென்றது. ஆனால் படத்தை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் தியேட்டர் முன் குவிந்தார்கள். முட்டி மோதிய ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு அரங்கிலாவது படத்தை திரையிட்டாலேயே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை.
இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கொழும்பில் இருந்து ஒரு பிரதியை கேட்க முடியாது. ஏனெனில் கொழும்பிலும் இதே நிலைமைதான். தமிழ்நாட்டில் இருந்து வரவைக்கவும் கால அவகாசம் தேவைப்படும். எனவே யாழ் நகரில் இருக்கும் ஒரு பிரதியை வைத்தே நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தியேட்டர் நிர்வாகம் சிந்தித்தது. ஒரே ஒரு பிரதியை வைத்துக் கொண்டே இரண்டு அரங்குகளில் படம் ஒரே நாளில் திரையிடப்பட்டது.
இப்படி 100 நாட்கள் வரை ஒரே பிரதியை வைத்துக்கொண்டே இரு அரங்குகள் மூலம் வசந்த மாளிகை திரையிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழ்நாட்டிலும் இது கடைபிடிக்கப்பட்டதாக சொல்வார்கள்.