பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

நேற்று முன்தினம் நடந்த திரைப்பட சங்கங்களின் கூட்டுக்கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 16ம் தேதி முதல் புது பட தயாரிப்புகளை நிறுத்தப்படும் எனவும், நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி ரிலீஸ் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது கூட்டுக்குழுவின் இந்த முடிவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தனுஷ் மீது இதுநாள்வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எந்த புகாரும் நிலுவையிலும் இல்லை. இருதரப்பும் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு தென் இந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.
திரைப்படங்களில் மிக பிரதான பங்காற்றும் தென் இந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.
இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். மேலும் இது தொடர்பாக விரைவில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




