நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜூலை மாதம் இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. இரண்டு பெரிய படங்களான 'இந்தியன் 2, ராயன்' ஆகியவை இரண்டு வார இடைவெளியில் வந்ததால் இந்த மாதம் அதிகப் படங்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் ஆகஸ்ட் மாதம் நிறைய படங்கள் வெளியாகும் என்பதன் முன்னோட்டமாக இந்த வாரம் ஆகஸ்ட் 2ம் தேதியன்று “போட், ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா' ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் குறித்து திரையுலகத்தில் விசாரித்த போது இரண்டு படங்களைப் பற்றிப் பலரும் பாராட்டிப் பேசுகிறார்கள். 'இம்சை அரசன் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், புலி' ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள 'போட்' படத்தைப் பார்த்த பல இயக்குனர்கள் படம் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்து, அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கம் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில், அம்மு அபிராமி, சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஜமா' படம் பற்றியும் திரையுலகில் பாசிட்டிவ்வான பாராட்டுக்களைச் சொல்கிறார்கள். மற்ற படங்களைக் காட்டிலும் இந்த இரண்டு படங்களுக்கான பாசிட்டிவ் தகவல்கள் அதிகமாகப் பரவியுள்ளன.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்', நகுல் நடித்துள்ள 'வாஸ்கோடகாமா', பாலசரவணன் நடித்துள்ள 'பேச்சி', அனந்த் இயக்கி நடித்துள்ள 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' ஆகிய படங்களுக்கான சிறப்புக் காட்சிகள் இன்னும் நடைபெறாததால் அவற்றிற்கான 'இன்ஸ்டஸ்ட்ரி' பாராட்டுக்கள் இன்னும் வெளியாகவில்லை.