ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
முன்னனி நடிகர்களின் வாரிசுகள் தாங்களும் தந்தையை போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருக்கும்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இயக்குனராக கிளம்பி விட்டார். திரைப்படம் தொடர்பான படிப்பை வெளிநாட்டில் முடித்தவர் சஞ்சய். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என அனைத்தையும் படித்தார். ஆனால் முதலில் படம் இயக்க விரும்புவதாக அவர் தெரிவித்தவுடன் விஜய் அதற்கு முழு சம்மதம் தெரிவித்ததுடன், யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன். நீயாகவே வாய்ப்பு தேடிக் கொள்ள வேண்டும். நீயாகவே முன்னுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பல முன்னணி நிறுவனங்களிடம் கதை சொன்னார். இறுதியாக லைகா நிறுவனம் சஞ்சயை டிக் அடித்தது. லைகா நிறுவனம் 'இந்தியன் 2' மற்றும் 'விடாமுயற்சி' படங்களில் பிசியாக இருந்தால் சஞ்சய் இயக்கும் படத்தை தள்ளி வைத்தது. இதனால் படமே டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவின. சமீபத்தில் சஞ்சய்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம் படத்தை உறுதி செய்தது லைகா.
தற்போது சஞ்சய் படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் யகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். முழு விபரங்களுடன் முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.