வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் |
வேட்டையன் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்த பேரனை அவரே காரில் அழைத்து சென்றுள்ளார்.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. இயக்குனராக உள்ள இவரது மூத்த மகன் வேத். காரில் அப்பா ரஜினி மற்றும் மகன் வேத் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து சவுந்தர்யா வெளியிட்ட பதிவு : ‛‛எனது மகன் இன்று பள்ளிக்கு போக மாட்டேன் என அடம் பிடித்தான். அவனது சூப்பர் ஹீரோ தாத்தா(ரஜினி) பள்ளிக்கு அழைத்து சென்றார். திரையிலும், நிஜ வாழ்விலும் நீங்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாகவே செய்து விடுகிறீர்கள் என் அப்பா'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு போட்டோவில் ரஜினி பள்ளிக்கு வந்துள்ளதை பார்த்து அந்த பள்ளியின் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் ஆச்சர்யத்துடன், மகிழ்ச்சியுடன் உள்ளனர்.