‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கு மீடியாக்களில் கலவையான விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் வெளிவந்தன.
படத்தை 'பார்ட் பார்ட்' ஆக பிரித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி விமர்சிப்பதில் ஒரு உள்நோக்கம் உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். இத்தனை விதமான விமர்சனங்களுக்கும் படக்குழுவிலிருந்து யாரும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.
இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது 'இந்தியன் 2'. இருந்தாலும் படம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன.
படத்தில் இந்தியன் தாத்தாவைக் கைது செய்யத் துடிக்கும் சிபிஐ அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்திற்கு வரும் விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “எல்லாருமே ரொம்ப அறிவாளியா நினைச்சிட்டிருக்காங்க. ஒரு விஷயம் நல்லாருக்குன்னு சொன்னா நம்மளை முட்டாளா நினைச்சுக்குவாங்களோன்னு ஏதோ ஒண்ணு பேசிட்டிருக்காங்க. அந்த அறிவாளிங்களைப் பத்தி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ், அவங்களுக்குப் புடிச்சிச்சா, நமக்கு அவங்கதான் தேவை, அறிவாளிங்க தேவையில்லை, அறிவை வச்சிக்கிட்டு அவங்க இருக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.




