வனபர்த்தி கோயிலில் திருமணம் : அதிதி ராவ் ஹைதாரி தகவல் | ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி ? | குறைவான எதிர்பார்ப்பில் 'தி கோட்' தெலுங்கு ரிலீஸ் | ரஜினியின் கூலி படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் அமீர்கான் | வேட்டையன் டப்பிங்கை தொடங்கினார் ரஜினி | யுவன் சங்கர் ராஜாவை புக் பண்ண சொன்னதே விஜய்தான் - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | இப்படியும் கூட பழிவாங்குவார்கள் : படப்பிடிப்பிலிருந்து தப்பித்த ஊர்வசியின் அனுபவம் | 100 நாட்களைக் கடந்த ராமராஜனின் 'சாமானியன்' !!! | தியேட்டர்களில் பேனர் வைக்க கட்டுப்பாடு : கோரிக்கை வைக்கும் சங்கம் | கேரவன் கேவலம் : நடிகைகளை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள் - பகீர் தகவல் பகிர்ந்த ராதிகா |
முதல்முறையாக தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் ஒருபுறம் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் ரயிலில் நிகழும் சம்பவத்தை மையமாக வைத்து ஆக் ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது. மிஷ்கினே இசையமைக்கிறார். இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாது பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். இப்போது டிரெயின் படத்தில் பாடியிருக்கிறார்.