இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மஞ்சிமா மோகன். தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிப்பதாக இருந்தது. அந்த திட்டம் தொடங்கப்படவில்லை. 'தேவராட்டம்' படத்தில் உடன் நடித்த கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். அப்போது அவர் உடல் எடை கணிசமாக உயர்ந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் கடுமையான உருவ கேலிகளை சந்தித்தார். கவுதம் கார்த்திக்கின் அக்கா போல இருக்கிறார் என்றெல்லாம் விமர்சித்தார்கள். இதற்காக அவர் நெகிழ்ச்சியான பதிவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இந்த படங்களை அவர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். அப்போது உருவ கேலி செய்த நெட்டின்கள். இப்போது மீண்டும் நடியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.