‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தமிழில் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஓரளவு தேடப்படும் நடிகராக இரண்டையும் பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார் சந்தீப் கிஷன். கடந்த வருடம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் அடுத்ததாக விரைவில் வெளியாக உள்ள தனுஷின் ராயன் படத்திலும் இணைந்து நடித்துள்ளார். இன்னொரு பக்கம் செகந்திராபாத்தில் 'விவாக போஜனம்பு' என்கிற ஒரு ரெஸ்டாரண்டின் கிளையை சொந்தமாக நடத்தி வருகிறார் சந்தீப் கிஷன்.
சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டை சோதனை செய்த சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார குறைபாடுகள் உள்ளிட்ட பல குறைகள் இருப்பதை கண்டறிந்து அது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அது மட்டுமல்ல 2022ல் காலாவதியான அரிசி மூட்டை ஒன்றும் அங்கே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புகார்கள் குறித்து மறுத்துள்ள சந்தீப் கிஷன், “அதிகாரிகள் என்னுடைய ஹோட்டலில் எடுத்ததாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் பல எங்களுடைய ஹோட்டலில் எடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல 2022-ல் வாங்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த அரிசி மூட்டை நாங்கள் தர சோதனைக்காக வாங்கி, சரி இல்லை என அப்படியே பயன்படுத்தாமல் வைத்துவிட்ட ஒன்று. கடந்த எட்டு வருடங்களாக நாங்கள் அனைத்து சுகாதார விதிகளையும் சரியாக பின்பற்றியே இந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறோம். உங்களுடைய அன்பை ஒருபோதும் நாங்கள் இழக்க விரும்ப மாட்டோம்” என்று கூறியுள்ளார்.