திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்றவர் காமெடியன் சூரி. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்தவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த படம் வெற்றி பெற தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது நடிப்பில் கருடன் படம் திரைக்கு வந்த நிலையில் அடுத்தபடியாக கொட்டுக்காளி, விடுதலை-2 படங்கள் திரைக்கு வர உள்ளன.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார் சூரி. அங்கு கூலிங் கிளாஸ் போட்டபடி கால் மேல் கால் போட்டு தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து, நம்ம பரோட்டா சூர்யா இது, ஆள் அடையாளமே தெரியவில்லை என்று அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.