ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வந்து முடிவடைந்தது.
ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் உறியடி விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. இதில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் சில பிரச்னைகளால் இப்படத்தை விட்டு விஜயகுமார் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.