விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா |
ஆஸ்கர் விருது வரை சென்ற 'கூழாங்கல்' படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் தற்போது 'ஜமா' என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், 'வடசென்னை' புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கூழாங்கல்' படத்தை நயன்தாரா வாங்கி வெளியிட்டது போன்று இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.
இது குறித்து அலெக்சாண்டர் கூறுகையில், ‛‛ஜமா' நல்ல கதையைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை கவருவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் 'ஜமா' கொண்டுள்ளது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். படத்தை கணிசமான எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிட உள்ளோம் மற்றும் ஆகஸ்ட் 2ம் தேதி படம் வெளியாவதால் விரைவில் புரோமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளோம்'' என்றார்.