பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‛இந்தியன் 2'. 1996ல் இவர்கள் கூட்டணியில் இந்தியன் படம் வந்தது. அதன்பின் 28 ஆண்டுகளுக்கு பின் தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்று(ஜூலை 12) வெளியாகி உள்ளது. கமல் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கே தியேட்டர்களில் இந்தியன் 2 படம் வெளியானது. இதை கமலின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள கமலின் பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டு என ரசிகர்கள் கொண்டாடினர்.
தமிழகத்தில் சுமார் 800 தியேட்டர்களில் இந்தியன் 2 படம் வெளியாகி உள்ளது. அதேசமயம் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிறமாநிலங்களில் அதிகாலையிலேயே படங்கள் வெளியாகின. படத்திற்கு கலவையான விமர்சனங்களை வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.