Advertisement

சிறப்புச்செய்திகள்

எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன்-2 படத்தில் வர்மக்கலை முத்திரை: எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கமல், ஷங்கர் பதிலளிக்க உத்தரவு

09 ஜூலை, 2024 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Vermakalai-Mudra-in-Indian-2:-Kamal,-Shankar-ordered-to-respond-in-case-filed-against


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் வரும் ஜூலை 12ல் வெளியாகிறது. வர்மக்கலையை முக்கிய அம்சமாக கொண்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசன், வர்மக்கலையால் எதிரிகளை தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த மஞ்சா வர்மக்கலை தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட 4வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மஞ்சா வர்ம கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்தேன்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் வர்மக் கலை சம்பந்தமான சண்டை முறைகளையும், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அதோடு செயல்முறையாகவும் வர்மக் கலையை செய்து காட்டினேன். பின்பு நடைபெற்ற தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று வர்மா சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்தேன். அதன் பயனாக படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

'இந்தியன்' படத்தில் வர்மக்கலை சண்டை காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும் எனது 'தொடுவர்மம் 96 வர்மக்கலை' என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளை பயன்படுத்தி காட்சிபடுத்தினேன். இதற்கு முன் வேறு எந்த புத்தகத்திலும் இந்த முத்திரைகள் படங்களுடன் வந்தது இல்லை. இந்நிலையில் 'இந்தியன்' படத்தின் 2-ம் பாகத்தின் பட போஸ்டர்களில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது.

எனது அனுமதி இல்லாமல் 'இந்தியன்-2' படத்தில் வர்மக்கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். என்னிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை 'இந்தியன்-2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛இந்தியன் 2 திரைப்படம் 800 கோடி ரூபாய் மதிப்பில் வெளியாக உள்ளது. வர்மக்கலை பழமையானது; அகத்தியர் தோற்றுவித்தது. வர்மக்கலைக்கு ஆசான் ராஜேந்திரன் உரிமைகோர முடியாது'' என வாதிட்டார். இதனைக்கேட்ட நீதிபதி, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் 11ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் படத்தை வாங்கிய அஜித் படத் தயாரிப்பு நிறுவனம்விஜய் படத்தை வாங்கிய அஜித் படத் ... புகார் கூறப்பட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் புகார் கூறப்பட்ட நடிகர்கள் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)