கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் என்.முரளி ராமசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், துணைத்தலைவர் ஜி எம் தமிழ்குமரன், இணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையே புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.
* சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்ற படப்பிடிப்புக்கு மட்டுமே, திரைப்பட தொழிலாளர்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு 'ஸ்குவாட்' என்ற பெயரில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து யாரும் சென்று இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் யாரும் படப்பிடிப்பை நிறுத்தக்கூடாது. எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க வேண்டும்.
* தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் அளித்த புகார்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் நடிகர் சங்க கவனத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டிய நடிகர்கள் யார்? யார்? என்ற விபரத்தை தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.