100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படம் மூலமாக அறிமுகமானார். அதன்பிறகு அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் இணைந்து லடாக் பகுதிகளில் பல மைல் தூரம் பைக் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது முதல், பைக் ஓட்டும் ஆர்வமும் மஞ்சுவாரியருக்கு துவங்கியது. அஜித்தும் அவருக்கு பைக் ஓட்டுவது குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொடுத்ததுடன் அவரை டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, மஞ்சு வாரியர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்ததுடன் கடந்த வருடம் புதிதாக பிஎம்டபிள்யூ பைக் ஒன்றையும் வாங்கினார்.
அவ்வபோது சாலையில் பைக்கில் பயணிக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சில நண்பர்களுடன் இணைந்து பைக் பயணங்களை விடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் மஞ்சு வாரியர். அப்படி சமீபத்தில் பைக் பயணம் மேற்கொண்ட அவர் அது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அதில் அஜித்குமாரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணங்களில் மஞ்சுவாரியரின் நீண்ட நாள் நண்பரான பினீஷ் சந்திரன் என்பவர் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.




