மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'சலார்'. இரண்டாவது பாகமான 'சலார் 2' படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு ஆரம்பமாகாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தது.
ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்க பிரசாந்த் நீல் போய்விடுவார். அதனால், 'சலார் 2' படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனெவே 20 சதவீத படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதன் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டு பின்னர்தான் ஜூனியர் என்டிஆர் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் பிரசாந்த் நீல்.
2025ம் ஆண்டில் 'சலார் 2' வெளியாக உள்ளது.
 
           
             
           
             
           
             
           
            