நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அதையடுத்து அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து அப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சல்மான்கான் நடிப்பில் தனது புதிய படத்தை அட்லி இயக்குவதாக பின்னர் செய்திகள் வெளியாகின. அதோடு அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால், சல்மான்கான் நடிக்கும் அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க கமல்ஹாசனிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒருவேளை அப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்து விட்டதால் கமலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான் ரஜினி, கமல் இருவரில் யார் நடிக்கிறார்கள்? என்ற உண்மை தெரியவரும்.