டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் | திரிஷா, வினய்யை தொடர்ந்து ஐடென்டி படப்பிடிப்பை முடித்த டொவினோ தாமஸ் | அமெரிக்காவில் கருட மகாராஜாவை சந்தித்த வெங்கட்பிரபு | விஜய்யின் ஓப்பனிங் பாடல்களில் கவனம் செலுத்தாத அனிருத் : பாடலாசிரியர் கபிலன் ஆதங்கம் | கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்த ரஜினியை அழைத்துச் சென்ற மோகன்பாபு |
தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூலை 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியதால் இந்த படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூலை 6ம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.