'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர், நேரம் கிடைக்கும்போது அடுத்தடுத்த படத்திற்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
ஏற்கனவே ‛இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதனை டிரீம் வாரியர், அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூர்யா, ரவிக்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.