இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி- 2, சாஹோ, ஆதி புருஸ், சலார் ஆகிய நான்கு படங்களும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது ஐந்தாவதாக இந்த கல்கி படமும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மேலும், கல்கி படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் எப்போது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.