நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரமோஷனை சில தினங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.
சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அடுத்து இன்று மாலை மலேசியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அதற்கடுத்து ரசிகர்களின் சந்திப்பும் நடைபெற உள்ளது. இதற்காக கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்.
மலேசியாவில் இப்படம் சுமார் 156 இடங்களில் திரையிடப்பட உள்ளது. மலேசியாவில் இதற்கு முன்பு வேறு எந்தப் படமும் இத்தனை இடங்களில் வெளியாகவில்லை. மலேசியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் சில வெளிநாடுகளிலும் இப்படத்திற்கான நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிகிறது.