பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் சித்திக். இவரது மூத்த மகன் ரஷீன் என்பவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்துள்ளார். 37 வயது ஆன ரஷீன் பல நாட்களாக சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் சித்திக் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத் திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சித்திக். தமிழில் எப்படி கமலுக்கும் ரஜினிக்கும் நடிகர் நாசர் பொதுவான நண்பராக அவர்களது படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தாரோ அதேபோல மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களில் இப்போது வரை தவறாமல் இடம்பெற்று நடித்து வருபவர் தான் சித்திக்.
தமிழில் ஜனா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரங்கூன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இறந்து போன ரஷீன் மூத்த மகன். இவரை எப்போதுமே கடவுள் தனக்கு கொடுத்த தனது சிறப்பு குழந்தை என்று பல பேட்டிகளில் சித்திக் குறிப்பிட்டுள்ளார். இவரது இளைய மகன் சாஹீன் என்பவர் தந்தையைப் போலவே சினிமாவில் ஒரு நடிகராக நடித்து வருகிறார்.