எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஹிந்தித் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ஆனால், அவர்கள் கடைசியாகத் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தன.
டைகர் ஷெராப், அமிதாப்பச்சன், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'கண்பத்'. சுமார் 190 கோடி செலவில் தயாரான இந்தப் படம் வெறும் 13 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்து அக்ஷய்குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்து ஏப்ரலில் வெளிவந்த படம் 'படே மியான் சோட்டோ மியான்'. சுமார் 350 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 90 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்தடுத்த இரண்டு படங்களால் கடும் நஷ்டத்திற்கு ஆளானது பூஜா என்டர்டெயின்மென்ட்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜாக்கி பக்னானி. இவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர். ஜாக்கியின் அப்பா வாசு பக்னானி 1995ம் ஆண்டு பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடர் நஷ்டங்களால் மும்பையில் அவர்களுக்குச் சொந்தமான 7 அடுக்கு மாடி அலுவலகத்தை விற்றுள்ளனர். அதோடு அவர்களிடம் வேலை பார்த்த ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர்.
பாலிவுட்டின் முக்கிய நிறுவனம் ஒன்று இப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.