கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த கோட் படம் திரைக்கு வருகிறது.
இதையடுத்து விஜய் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும், விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாளான நாளை ஜூன் 22 ஆம் தேதி இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முக்கிய அப்டேட்டும் அவரது 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது.