காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பூர்வீகம் தெலுங்கு என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா. பள்ளியில் படிக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 'காதல்' படத்தில் பரத் ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் சந்தியா தேர்வு செய்யப்பட்டதால், சந்தியாவின் தோழியாக நடித்தார்.
அதன்பிறகு பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைக்காலம், ரெட்ட வாலு உள்பட பல படங்களில் நடித்தார், கடைசியாக 10 வருடங்களுக்கு முன்பு 'முயல்' என்ற படத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்கதில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் எடை கூடி தலையில் மொட்டை அடித்து காட்சி அளிக்கிறார். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட சரண்யாவின் முக்கிய பணியே கோவில்களுக்கு செல்வதுதான், அந்த வகையில் ஒரு நேர்த்தி கடனுக்காக அவர் மொட்டை போட்டுள்ளார். அன்றைய தினம் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.