விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை |

ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியவர் தமிழ் இயக்குனரான அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையைக் கூட அவர் அல்லு அர்ஜுனிடம் சொல்லிவிட்டார் என்றார்கள்.
இந்நிலையில் அந்தப் படத்தைத் தற்போது 'டிராப்' செய்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கட்ட நிலையிலேயே இப்படம் டிராப் ஆனதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் வெளிவந்த பிறகுதான் அல்லு அர்ஜுனின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியுமாம். ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் ரவி கிஷோருக்காக அவர் செய்த பிரச்சாரம் காரணமாக கடும் கமெண்ட்டுகள் வெளியானது. அது அல்லு அர்ஜுனின் எதிர்வரும் படங்களில் எப்படி எதிரொலிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.




