லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவின் சோசியல் மீடியா கணக்கை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் இப்போதிருந்தே வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் பிறந்தநாளில் ‛தி கோட்' படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று ஒரு பதிவு போட்டு உள்ளார். இதையடுத்து அன்றைய தினம் ‛தி கோட்' படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாக விஜய் ரசிகர்கள் ஒரு செய்தியை வைரலாக்கி வருகிறார்கள்.