ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த 2012ல் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். அதைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் வித்யுத் ஜாம்வால்.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வித்யுத் ஜாம்வால் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் டைரக்சனில் நடிக்கிறார் வித்யுத் ஜாம்வால்.