அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டிரைலர் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பதிவிட்ட ஒரு எச்சரிக்கை நோட்டீஸை சமூக வலைத்தளங்களில் மீண்டும் மறுபதிவு செய்துள்ளது.
அதன்படி டிரைலரின் எந்த ஒரு காட்சி, புகைப்படம், வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் காப்பிரைட் சட்டம், 1957 படி குற்றமாகும். சைபர் போலீஸ் துணையுடன் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
இதனால் மீம் கிரியேட்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் 'கல்கி 2898 ஏடி' படத்தின் எந்த ஒரு புகைப்படத்தையும், வீடியோக்களையும் பயன்படுத்த முடியாது. பொதுவாக எந்த ஒரு பெரிய நடிகரின் டிரைலர், டீசர் வந்தாலும் அவை 'டிரோல்' செய்யப்பட்டு மீம்களாக வலம் வரும். தற்போது இத்தயாரிப்பு நிறுவனத்தின் எச்சரிக்கையால் இப்படத்திற்கு அப்படி எதுவும் செய்ய முடியாது என நம்புவோம்.