பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

தமிழில் தில் படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்த இவர் கில்லி, மலைக்கோட்டை உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை கலந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவிற்கு வருகை தந்த ஆசிஷ் வித்யார்த்தி கொச்சியில் உள்ள பத்மா ஜங்ஷனில் 'சிட் டவுன் ஆசிஸ்' என்கிற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் சிறுவயதாக இருக்கும் போது கன்னியாகுமரியில் வசந்த காலம் துவங்குவதை பற்றி பலரும் கூற கேள்விப்பட்டுள்ளேன். அப்படி அந்த வசந்த காலத்தை தேடி நானும் எனது மனைவியும் பல நாடுகளுக்கு பயணப்பட்டோம். இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆக இருந்தது. ஒவ்வொரு சிறிய நகரங்களிலும் நாங்கள் செல்லும்போது ஒவ்வொரு மாலை பொழுதிலும் அங்குள்ள உணவகங்கள், தெருக்களில் அங்கு இருக்கும் மக்கள் முன்பாக சென்று ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தோம். 350 படங்களில் நான் நடித்திருந்தாலும் ரசிகர்கள் முன்பாக இப்படி நடிப்பது என்னுடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது” என்று கூறியுள்ளார்.