பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

ஆந்திர மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 பார்லிமென்ட் தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு இன்னும் இரண்டு நாட்களில் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வந்த பின் டில்லி சென்ற பவன் கல்யாண், என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலும் மனைவியோடு கலந்து கொண்டார்.
ஆந்திர திரும்பிய பின் அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியல் பணியாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளையும் எடுக்க உள்ளாராம். அதனால், அடுத்த சில மாதங்களுக்கு தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளைத் தள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
தற்போது, “ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்” ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.