தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
விஜய்யின் 50வது பிறந்தநாள் வருகிற 22ம் தேதி வருகிறது. இதனை அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விஜய் நடித்த துப்பாக்கி படம் மீண்டும் வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடித்த 'போக்கிரி' படம் வருகிற 21ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்திய ராமமூர்த்தி தயாரித்திருந்தார். பிரபுதேவா இயக்கி இருந்தார். அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் வெற்றி அடைந்தது. படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. அப்போதே 'ஷிப்டிங்' எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100நாட்கள் ஓடி சாதனை படைத்தது.