ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். இந்நிறுவனத்தின் உரிமையாளராக கேஇ ஞானவேல்ராஜா இருந்தாலும், முக்கிய பொறுப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இந்த நிறுவனம் தற்போது விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் இந்த தினங்களில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.
இதனிடையே, தயாரிப்பாளர் தனஞ்செயன் அது குறித்து கோபமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “கங்குவா, தங்கலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து, என்னை 'டேக்' செய்து நிறைய பதிவுகள், கிண்டல்கள் ஆகியவற்றைப் பார்க்கிறேன். நண்பர்களே கூலாக இருங்கள். உங்கள் உற்சாகத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், பல நூறு கோடிகளை முதலீடு செய்த ஒரு தயாரிப்பாளருக்கு தனது படங்களை எப்போது வெளியிடுவது, வருவாயை அதிகப்படுத்துவது மற்றும் அபாயத்தைக் குறைப்பது என்பது தெரியும்.
சிலரை மகிழ்விப்பதற்காகவும், பிறகு கஷ்டப்படுவதற்காகவும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியாது. இது பொருளாதாரம் மற்றும் நல்ல தேதிக்கான வாய்ப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். எனவே, தயவு செய்து அறிவுரை கூறுவதையும், விமர்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அறிவிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்கவும். அதுவரை தேவயற்ற கிண்டல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும்,” என்று பதிவிட்டுள்ளார்.
அவர் இப்படி பதிவிட்டும் கூட அதில் கிண்டல் செய்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர் சில ரசிகர்கள்.