பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். அப்படம் அவருக்கு தமிழில் ஒரு பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் சஞ்சய் தத்.
தற்போது சென்னையில் சிவகார்த்திகேயனும் அவரும் மோதிக்கொள்ளும் அதிரடியான சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்குமணி வசந்த் நடிக்கும் இப்படம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.