லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். 13 வருடங்களுக்கு முன்பே தமிழில் 'சீடன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார். சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ் மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால், அப்படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு தமிழில் அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவேயில்லை.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் நடித்த 'கருடன்' படம் கடந்த வாரம் வெளிவந்தது. அவரது நடிப்பிற்கும் ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 'சீடன்' படத்தில் விட்டதை 'கருடன்' படத்தில் பிடித்துவிட்டார். அடுத்து தமிழில் நடிக்க அவரைத் தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டதாம். நல்ல கதையும், கதாபாத்திரமும் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க அவரும் முடிவு செய்துள்ளாராம்.
மலையாள நடிகர்களுக்கு தமிழில் நடிக்க எப்போதுமே ஆசை உண்டு. தற்போதைக்கு பஹத் பாசில் தான் இங்கு குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பலரும் இங்கு ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.