Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛‛இந்தியனே அரசியல்தான் பேசுது.. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் வரும்'': கமல்ஹாசன் பேச்சு

02 ஜூன், 2024 - 04:16 IST
எழுத்தின் அளவு:
Politics-is-talking-about-India..-The-day-will-come-when-Tamil-will-rule-India:-Kamal-Haasan-speech


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் -2' திரைப்படம் ஜூலையில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது.


விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுனு தெரியல. ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் அதிர்ஷ்டம், விபத்து அல்ல. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்காரு. அவர் முதன்முதலில் ஒரு கதையை எடுத்துட்டு என்கிட்ட வந்தாரு. அப்போ எனக்கு அந்த சித்தாந்ததுல உடன்பாடு இல்லனு நடிக்கல. இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஷங்கர் இதுக்கு பிறகும் என்கிட்ட வந்தாரு. அப்போ நான் சிவாஜி சாரை வச்சு ஒரு படத்தை இயக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்போ அதே மாதிரியான கதையைதான் ஷங்கர் சொன்னாரு. அப்போ நான் சிவாஜி ஐயாகிட்ட இதை பத்தி சொல்லும்போது அவரும் நீ சொன்ன கதையில நீ மகன் நான் அப்பா, இதுல அப்பாவும் மகனும் நீதான். இந்த கதையை பண்ணுனு சொன்னாரு.

தடைகள்

தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்த படத்தை இன்னும் பார்த்திருக்கமாட்டாரு. எங்க ரெண்டு பேரையும் நம்பி பல விஷயங்கள் பண்ணுங்கன்னு சொன்னாரு. இந்த படத்துக்கு கொரோனா, விபத்துனு பல தடைகள் வந்துச்சு. இந்தியனே அரசியல்தான் பேசுது. என்னுடன் இந்த படத்துல உதயநிதி உறுதுணையாக நின்றது போல அவரோடு நான் உடன் நிற்கும் நேரம் வரலாம். இந்த படத்துல எது கிராபிக்ஸ்னு கேட்டீங்கன்னா.. அது தான் ஸ்ரீனிவாஸ் மோகனுடைய வெற்றி. அது போலதான் சொல்லப்போறாங்க.

15 வயசு அதிகம்

இந்த படத்துல் ஒரு அசிஸ்டன்ட் என்கிட்ட 'உங்க கூட நான் இந்த படத்துல மறுபடியும் வேலை பாக்குறேன்'னு சொன்னாரு. அவர் விபத்துல இறந்துட்டாரு. அதே போல் விவேக், மனோபாலாவும் இப்போது இல்லை. அவங்க இல்லைங்கிறது உங்களுக்கு குறையாக இருக்கலாம்; ஆனால், படத்துல அது குறையாக இருக்காது. என் வயசை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். இந்த விழாவுல இதை ஏன் பேசுனீங்கனு கேட்பாங்க. எந்த விழாவிலையும் பேசுவேன். இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும். அதைதான் இந்த படம் உணர்த்துகிறது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆதி- நிக்கி கல்ராணி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி ... இந்தியன் 2ம் பாகத்தில் காஜல் அகர்வால் இல்லை : டுவிஸ்ட் வைத்த ஷங்கர் இந்தியன் 2ம் பாகத்தில் காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

04 ஜூன், 2024 - 10:06 Report Abuse
Prasanna Krishnan R exactly ?.
Rate this:
sankar - Nellai,இந்தியா
03 ஜூன், 2024 - 08:06 Report Abuse
sankar வந்த அந்த நாளை - நாசமாக்கி - மூப்பனார் அவர்கள் பிரதமர் ஆகாமல் பார்த்துக்கொண்டு பெருந்தகை யார் என்பது ஊருக்கே தெரியும் - அவர்களுடன் இவர் கூட்டு - இவர் பேசுகிறார் தமிழன் பிரதமர் என்று - அப்படி ஒருவேளை தமிழன் பிரதமர் என்றால் அது அண்ணாமலை ஆகத்தான் இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)