மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், பாரதிராஜா, அபிராமி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில், சலூன் கடை நடத்தி வரும் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகிறார். ஆனால் அந்த லட்சுமி அவரது மனைவியா? மகளா? இல்லை பணமா? என்று காவல்துறையினர் அவரிடத்தில் கேள்வி எழுப்ப அது எதுவும் இல்லை என்று கூறும் விஜய் சேதுபதியால் லட்சுமி என்றால் என்ன என்பதை விளக்க முடியாத காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றிருக்கிறது. கடைசியில், ஒரு பெண் நின்று கொண்டிருக்க, அவரை வில்லன் அனுராக் காஷ்யப் நெருங்குகிறார். கட் பண்ணினால், யாரையோ வெட்டி சாய்த்து விட்டு அரிவாளுடன் ஓடுகிறார் விஜய் சேதுபதி. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.