நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆர் டி எக்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். பஞ்சாபி நடிகையான இவர் தொடர்ந்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் கோல்மால் மற்றும் ஏஞ்சல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ரக்ஷனா என்கிற படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரந்தீப் தாகூர் என்பவர் இயக்கியுள்ளதுடன் அவரே இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்.
கடந்த 2019-ல் துவங்கப்பட்ட இந்த படம் 2022ல் தயாராகி விட்டாலும் இப்போதுதான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாயல் ராஜ்புத்திற்கு இருக்கும் புகழை பயன்படுத்தி இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனக்கு இன்னும் சம்பள பாக்கியை செட்டில் செய்யவில்லை என்றும் அது குறித்து கேட்டால் மோசமான வார்த்தைகளில் தன்னை திட்டி தெலுங்கு திரையுலகில் நடிக்க விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறி தயாரிப்பாளர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார் பாயல் ராஜ்புத்.
இதனால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்பதுடன் படத்தை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. இது குறித்து ஒரு பக்கம் பிரந்தீப் தாகூர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பாயல் ராஜ்புத்தும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாரானார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத டுவிஸ்ட்டாக இந்த பிரச்சனையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. பாயல் ராஜபுத்துக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை செட்டில் பண்ணி விடுவதாக தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளாராம். அதேசமயம் பாயல் ராஜ்புத் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.