குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
முன்னணி தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத். 'ஆர்டிஎக்ஸ் 100', 'மங்களாவரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'ரக்ஷனா' என்ற படம் வருகிற ஜூன் 7ம் தேதி வெளி வருகிறது. துப்பறியும் திகில் கதையான இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரன்தீப் தாகூர் என்பவர் தயாரித்து, இயக்கி உள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் பாயல் ராஜ்புத் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் குறித்து பாயல் ராஜ்புத் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ‛‛ரக்ஷனா படத்திற்கு எனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை. சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை கேட்டால் தயாரிப்பாளர் உன்னை தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார். நேரடியாகவும், ஆட்கள் மூலமாகவும் என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்ற பாயல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாயல்ராஜ் புத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. "படத்தின் ப்ரொமோஷனுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக 'ரக்ஷனா' படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தையில் பாயல் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். உண்மையில் அவருக்கு சம்பள பிரச்னை இருந்தால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் மேற்கொள்ளும். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளர் மிரட்டுவதாக கூறுவதும் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்ள மறுப்பதும் கண்டனத்துக்கு உரியது" என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.