‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சூர்யாவுக்கு சிறந்த படமாக அமைந்த ஒரு படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கிய அந்தப் படம் 68வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளை வென்றது.
சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி அவர்களது அடுத்த படமாக 'புறநானூறு' படத்தை அறிவித்தது. ஆனால், படப்பிடிப்புக்கு போகாமல் படத்தைத் தள்ளி வைத்துவிட்டனர். கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்யச் சொன்னதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள்.
இதனிடையே, தற்போது படத்தை டிராப் செய்யும் முடிவுக்கே வந்துவிட்டார்களாம். 1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தாராம் சுதா. தற்போது சென்னையை விட்டுவிட்டு மும்பையில் குடியேறிவிட்டார் இப்படத்தின் நாயகன் சூர்யா. ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவர் இப்படி வீடு மாறியுள்ளார். இந்த சமயத்தில் ஹிந்தி எதிர்ப்புப் படத்தில் நடித்தால் ஹிந்திப் படங்களில் நடிப்பது சரியாக இருக்காது என்ற கருத்து அவரிடம் முன்வைக்கப்பட்டதாம்.
எனவே, படத்தின் கதையை ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதிலிருந்து மாற்றச் சொன்னாராம் சூர்யா. ஆனால், படத்தின் கருவே அதுதான், அதை மாற்ற முடியாது என சுதா கண்டிப்புடன் மறுத்துவிட்டாராம். எனவே, இந்தக் கதையை டிராப் செய்துவிட்டு வேறு கதையுடன் வந்தால் நடித்துத் தருகிறேன் என சூர்யா தரப்பில் சுதாவிடம் சொன்னார்களாம். அதற்கு சுதா சம்மதிப்பாரா மாட்டாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.




