பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
இசை அமைப்பாளர் இளையராஜா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாடல்களுக்கு உரிமை கேட்டு வீண் பிரச்னை கிளப்புகிறா என விமர்னங்கள் வந்து கொண்டிருக்கம் நிலையில் நேற்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
தினமும் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோக்கள் வந்துகொண்டிருப்பதாக வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவது இல்லை. ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். இங்கே பாடல்களை முடித்துவிட்டு, இடையே சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் தலைகாட்டி கொண்டிருக்கிறேன்.
ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி. அதை உங்களுக்கு சொல்லி கொள்கிறேன். ஏனெனில் படத்துக்கான இசை வேறு. பின்னணி இசை வேறு. இதெல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி ஆகாது. எனவே ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன். உற்சாகமான இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் இளையராஜா கூறியுள்ளார்.