இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! |
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர் 2013ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இவர்களின் 11 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும் ‛‛பலகட்ட யோசனைகளுக்கு பின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், எங்களது மன அமைதிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்'' என தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்களின் பிரிவை வைத்து சமூகவலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி''.
இவ்வாறு ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.