தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் முடித்து கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். 2018ல் பெங்களூரு தெற்கு, துணை ஆணையராகப் பதவி வகித்தார். அதன்பின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து சில ஆண்டுகளில் தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார்.
லோக்சபா தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரது பயோபிக் படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கப் போகிறாராம். தேர்தல் முடிவுகள் வந்த பின் அது பற்றிய அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றுவிட்டால் பயோபிக் பற்றிய அறிவிப்பு உறுதி என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி வருகிறாராம்.
கரூர் மாவட்டம் கிராமம் ஒன்றிலிருந்து படித்து வளர்ந்து, ஐபிஎஸ் முடித்து, கர்நாடகா மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி, தமிழக பாஜக தலைவராக இருக்கிறார் அண்ணாமலை. ஒரு திரைப்படத்திற்குரிய கதை இவரது வாழ்க்கையில் இருக்கிறது. அதனால் கமர்ஷியல் படமாகக் கூட இதை உருவாக்க முடியும் என தயாரிப்பு வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்களாம்.
ஏற்கெனவே ஒரு பேட்டியில் ஈபிஎஸ்-ஆ, ஓபிஎஸ்-ஆ என்ற கேள்விக்கு 'ஐபிஎஸ்' என பதிலளித்தவர் நடிகர் விஷால். பாஜகவிற்கு ஆதரவான நடிகர் விஷால். எனவே, அவரும் அண்ணாமலை பயோபிக்கில் நடிக்க உடனடியாக சம்மதிப்பார் என்கிறார்கள்.