‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடன இயக்குனர்கள் நடிப்பில் ஆர்வம் காட்டும் காலம் இது. அந்த வரிசையில் தினேஷ் மாஸ்டரும் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். 'ஒரு குப்பை கதை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு நாயே பேயே, சம்பவம், லோக்கல் சரக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'நின்னு விளையாடு'.
இந்த படத்தை ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கிறார். மலையாள நடிகை நந்தனா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் 'பரமனம்' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். மலையாள படம் ஒன்றில் நடித்து வரும் நந்தனா இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இவர்கள் தவிர தீபா சங்கர் பசங்க சிவக்குமார், சாவித்திரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அவர் கூறும்போது “சாமானியனின் வாழ்க்கையை காதலுடன் இணைத்து குடும்ப கதையாக சொல்லும் படம் இது. ஹீரோ காளை மாடு வளர்க்கிறார். அதன் மேல் பிரியத்துடன் இருக்கிறார். காதலா, காளைமாடா என்ற சூழலும் உருவாகிறது. சாதி மதங்களை இணைக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.




